Tuesday, March 29, 2011

DMK Election Manifesto-2011 for SC/ST welfare.
தி மு க தன் உடைய 62 பக்க தேர்தல் அறிக்கையில் 2 பக்கங்கள் மட்டுமே ST / ST நலத்திட்டங்களுக்கு ஒதுக்கி உள்ளது. அந்த அறிக்கையில் 15 லட்சம் பின்னடைவு காலி பனி இடங்களை கடந்த 30 ஆண்டுகளாக நிறைவு செய்யாமல் ,தொடர்ந்து தேர்தல் அறிக்கையில் மட்டுமே உறுதி அளித்து ஏமாற்றி வருகின்றனர்.

SC/ST மாணவர்களுக்கு சென்னை பல்கலை போன்றே மற்ற பல்கலைக்கும் விரிவுபடுத்தபடுமாம் . நடைமுறை படுத்த சிரமமான வாக்குறுதி! முதல் தலைமுறை மாணவர்களுக்கான கல்விகட்டனத்தை அரசே ஏற்றுக்கொள்ளும் என்று சொலிவிட்டு ,மாணவர்களை கல்விகட்டனத்தை கல்லூரியில் பணத்தை கட்டுவிட்டு பிறகு அரசி இடம் கையேந்தும் நிலைமை !!

மாணவர் விடுதியை புனரமைக்க தேர்தல் வருவேண்டுமாம் கடந்தகால ஆட்சியில் ஐந்து ஆண்டுகள் பற்ற வில்லையாம் !!!
பஞ்சமி நிலங்கள் பற்றியோ ,SC/ST sub Plan பற்றியோ ,தீண்டாமை ஒழிப்பு பற்றியோ , SC/ST யினரின் மேல் நடத்தப்படும் வன்கொடுமை ஒழிப்பு பற்றியோ ,ஊர் மற்றும் சேரி வேற்றுமை ஒழிப்பு பற்றியோ தேர்தல் அறிக்கையில் தரப்பட வில்லை . 

 SC/ST மக்களிடம் உள்ள ஒரே ஆயுதம் தேர்தலில் அளிக்கப்படும் வாக்கு அதை பெறுவதற்கான தேர்தல் அறிக்கையில் திராவிட கட்சிகள் மேற்சொன்ன முக்கியமான நடவடிக்கைகள் பற்றி தரப்பட வில்லை எனில் ,பிறகு எப்போது இவர்கள் தருவார்கள் அல்லது செயல் படுத்துவார்கள்.

பத்திரிக்கையாளர்கள் திரைபடங்களை மற்றும் கிரிகெட் பற்றி விமர்சிக்கிறார்கள் ,திராவிட கட்சிகளின் தேர்தல் அறிக்கை பற்றி SC/ST நலத்திட்டங்கள் குறித்து போதுமான திட்டம் எந்த கட்சிஇடமும் இல்லை என்று விமர்சிக்க வில்லை .

தி மு க பிற்படுத்த பட்டவர்களுக்கு என்று கமிஷன் ஏற்கனவே தொடங்கி செயல் படுத்தி வருகின்றது , 60 ஆண்டு கல ஆட்சிக்கு பிறகு இப்போதுதான் அத்தகைய கமிஷன் SC/ST அமைக்க போகிறார்களாம்!



Sorce: DMK party website
AIADMK Election Manifesto -2011 for the SC/ST
 Welfare
அ இ அ தி மு க தன்னுடைய 27 பக்க தேர்தல் அறிக்கையில் 1/2 பக்கம் SC/ST நலத்திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டு ,தற்போது உள்ள மாணிய தொகையான 30 சதவீத அல்லது 25 ௦௦௦ஆயிரத்தை குறைக்க போகிறதாம் !  ஆதாரம் காண்க  http://www.tahdco.tn.gov.in/ies_form.pdf

SC/ST அறிவு ஜீவிகள் அ இ அ தி மு க வில் இல்லையா அல்லது நமது இரட்சகர் babasheb Dr அம்பேத்கர் கூறியதுபோல் AIADMK மற்றும் DMK கைகூலிகளாக ஆகிவிட்டார்களா?!!

திராவிட கட்சிகள் தேர்தல் வாக்குறுதியில் அளிக்கப்படும் அனைத்தையும் செயல் படுத்துவார்கள் என்ற உறுதி இல்லை எனினும், தாங்கள் SC/ST மக்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளோம் ,அவர்கள் பிரச்சனைகளை புரிந்துகொண்டுள்ளோம் என்றாவது தேர்தல் அறிக்கை வெளிபடுத்த வேண்டாமா?  தி மு க மற்றும்  அ தி மு க  தேர்தல் அறிக்கைகள் SC/ST வாக்குகளை ஒரு கிள்ளு கீரையாகவே நினைகின்றனர் என்பது தெளிவாகவே புரிகிறது.




  

No comments:

Post a Comment